×

மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் கயல் ஆனந்தி

சென்னை: திருமணமாகி ஒரு மகனுக்கு தாயாகியுள்ள ‘கயல்’ ஆனந்தி, மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது அவர் ஹீரோயினாக நடித்துள்ள ’ஒயிட் ரோஸ்’ என்ற படத்தை பூம்பாறை முருகன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரஞ்சனி தயாரித்துள்ளார். திரில்லர் படமான இதை இயக்குனர் சுசி கணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்கியுள்ளார். வில்லனாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார் ‘கயல்’ ஆனந்தி ஜோடியாக விஜித், முக்கிய வேடங்களில் ரூசோ தரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் நடித்துள்ளனர்.

இப்படத்தில் காவல் கட்டுப்பாட்டு மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்காக பல லட்ச ரூபாய் செலவில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு ’மெட்ரோ’ ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார். சுதர்சன் எம்.குமார் பின்னணி இசை அமைத்துள்ளார். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

The post மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் கயல் ஆனந்தி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kayal Anandi ,Chennai ,Kayal' Anandi ,Ranjani ,Boomparai Murugan Productions ,Susi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஒயிட் ரோஸ் விமர்சனம்